Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்  அறிக்கை 

கரூர் மாவட்டத்தில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கலந்துகொண்ட பொதுமக்கள் இதுவரை 29 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. 40க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற ஒரு வேதனையான செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அளவிற்கு மக்கள் உயிர் பலியாகியிருப்பது மிகப்பெரிய ஒரு துயரமான சம்பவம்.  தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாளாக நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைவில் குணமடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை  இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டும் சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்), (12.03.2026) வியாழக்கிழமை…

ByBySenthil KumarMar 11, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புரட்சி அண்ணியார், கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தலைமை…

ByBySenthil KumarMar 8, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...