Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • Blog
  • டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமும், மக்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் – தேமுதிக வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை கடனில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி, அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்றி, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய உதவிகளை உடனே வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டுமென தே.மு.தி.க. சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 11.07.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (11.07.2025) சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர வேட்கையை…

ByBySenthil KumarJul 11, 2025

சிறு, குறு தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் வளம் பெற வேண்டி வாழ்த்து

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களையும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோர், உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறு, குறு தொழில்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நமது நாடு…

ByBySenthil KumarJun 27, 2025

திமுக கொடி பொருத்திய காரில் பெண்களைத் துரத்திச் சென்ற நபர்களுக்கு ஐந்து ஆண்டுகால தண்டனையைத் தமிழக முதல்வர் பெற்றுத் தருவாரா என்பது குறித்து அறிக்கை

பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக,…

ByBySenthil KumarJan 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...