சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளமாதேவி பஞ்சாயத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் பார் ஒன்று அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த பாரில் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கின்ற நிலையை கடுமையாக கண்டிக்கிறோம். கல்லா நத்தம் சாராய வியாபாரி ஜோதிவேல் மற்றும் அவரது நண்பர் ஆத்தூர் பாலு இருவரும் திமுக பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறை தடுக்க வேண்டும். விளம்பர மாடல் ஆட்சியில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது. கள்ளச் சாராயம் விற்பனையை தடுப்பதை விட்டு கள்ளச் சாராயம் குடித்து இறந்த பின் நிதி வழங்குவது எந்த விதத்தில் நியாயம். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மீண்டும் உயிர்ப் பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் கள்ளச்சாரயம் வியாபாரி ஜோதிவேல், பாலு இருவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மன்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையிலேயே பாக்கெட் கள்ளச்சாராயம் திமுகவினரால் விற்கப்படுவது வீடியோ ஆதாரத்தின் மூலம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளி வந்து தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும், கடும் கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் அவர்கள் தமிழக அரசின் விளம்பரத்தின் மூலம் “போதையின் பாதையில் செல்லாதீர்கள், அது உங்களை அழித்துவிடும்” என்று விளம்பர அரசியல் செய்து கொண்டு டாஸ்மாக் கடைகள் மூலமாகவே கள்ளச்சாராயத்தை விற்பது மிகவும் கண்டனத்திற்குறியது. டாஸ்மாக் விற்பனையை கண்காணிக்கவும் நேரத்திற்கு மீறி திறந்து வைக்கப்படும் கடைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிக்கவும், தனி பிரிவை உடனடியாக இந்த அரசு அமைத்து கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்ட வேண்டும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேமுதிக சார்பாக ஆத்தூரில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
