Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீரில் பஹால்காம் பகுதியில்சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அறிக்கை

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதியில் நேற்று (22-04-2025) நடந்த தீவிரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்கின்ற பேரதிர்ச்சியான செய்தி அனைவரின் மனதையும் வேதனை அடைய செய்திருக்கிறது. இப்போதுதான் ஜம்மு காஷ்மீரில் சகஜமான நிலைமை திரும்பிக்கொண்டு இருக்கிறது என மக்கள் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற சூழல் உருவாக்கி இருக்கும், இந்த நேரத்தில் எந்த வித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலாப் பயணிகளைத் தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. எந்தவித தவறும் செய்யாத அப்பாவி சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள்  தாக்கியதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தீவிரவாதத் தாக்குதல் மிகவும் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது. எனவே இந்திய அரசு உடனடியாக தீவிரவாத தாக்குதலில்  ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பாடத்தை வழங்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் இனி எங்கும் நடக்காத வண்ணம் நாட்டினுடைய எல்லையை இன்னும் பாதுகாப்புடனும் வலுவானதாகவும் மாற்றி தீவிரவாத தாக்குதல்களில் இருந்து, மக்களை காக்க வேண்டியது நமது அரசின் கடமை. இது போன்ற தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு  ஒடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க தேவையான உதவியை மத்திய அரசு  உடனடியாக செய்து தர வேண்டும். மேலும், உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...