சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சூரமங்கலம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் விலாசத்தில் 1998 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு.மார்ட்டின் பார்க் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 25 முதல் 35 வருடமாக பணி நியமனம் பெற்று 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதி செய்ததன் மூலம் பல கோடி லாபம் பெற்ற நிறுவனமாக இருந்துள்ளது. தலேமா நிறுவனத்தில் கடந்த காலத்தில் நிர்வாக இயக்குனர்களாக பணியாற்றி வந்தவர்கள் அதிக லாபம் பெற்று கொண்டு, வேறு மாவட்டத்திலும் மற்றும் வேறு மாநிலங்களிலும் புதிய கம்பெனி தொடங்கி நடத்தி வருகின்றனர். 25 வருடமாக அதிக லாபம் ஈட்டிய தலேமா நிறுவனத்தை, அயல் நாட்டு முதலாளிகள் பங்குதாரர்களாக வாங்கப்பட்டு, தமிழக தொழிலாளர்களின் வேலையை பறிப்பதற்காகவே நிறுவனத்தைக் கலைத்து, வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே தலேமா நிறுவனத்தை 25.02.2025 தேதியன்று ஆலை மூடல் தமிழக அரசு மறுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசிடம் அனுமதி பெறாமல் அயல்நாட்டு முதலாளிகள் தீர்மானம் நிறைவேற்றி தன்னிச்சையாக கதவடைப்பு செய்யப்படுகின்றனர். தலேமா நிறுவனத்தை கதவடைப்பு செய்யப்பட்டால் பள்ளி படிப்பு படிக்கும் குழந்தைகளை வைத்திருக்கும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் நடுத்தெருவில் தள்ளப்படும் சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனவே தலேமா நிறுவனத்தில் உடனடியாக தனி கவனம் செலுத்தி தமிழக அரசு எடுத்து நடத்தப்பட்டால் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் வாழும், மேலும் ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஏனென்றால் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற்ற தமிழக அரசு கவனம் செலுத்தி தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
