Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்று கூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வ குடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்கு முறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ் செயலாகும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் திமுக பட்டா வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தது, ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அவர்கள் குடியிருப்பு இடத்தை காலி செய்ய சொல்லி, அகற்றுவது எந்த வகையில் நியாயம். எனவே பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Releated Posts

வீரத்திற்கும், தியாகத்திற்கும் அழியாத அடையாளமாகத் திகழும் மருது சகோதரர்களின் 225-வது நினைவு தினம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் வெற்றிக்குத் துணைநின்று, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது, சின்ன மருது சகோதரர்களின்…

ByBySenthil KumarOct 24, 2026

தேமுதிக பத்திரிக்கை செய்தி – 23.10.2026

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (23.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களுடன் இணைந்து, தேமுதிக…

ByBySenthil KumarOct 23, 2026

விருத்தாசலத்தில் வாகன விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக அரசு சிகிச்சை அளிக்க வேண்டி அறிக்கை

விருத்தாசலத்தில் வாகன விபத்து – 40 பேர் படுகாயம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நிகழ்ந்த வாகன…

ByBySenthil KumarOct 23, 2026

தேமுதிக – பத்திரிக்கை செய்தி – 22.10.2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (22.10.2026) தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த்…

ByBySenthil KumarOct 22, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...