Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்று அறிக்கை

சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே கைது செய்து என்கவுண்டர் செய்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.ஏ.அருண் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களைக் கைது செய்தது மிகவும் பாராட்டுக்குரியது. மேலும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்கு இந்த முயற்சி உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மிகச்சிறந்த முறையில் காவல்துறை பணியாற்ற வேண்டும். ஸ்காட்லாண்ட் யார்டு காவல் துறைக்கு இணையாக செயல்பட்ட நமது காவல் துறை மீண்டும் இரானி கொள்ளையர்களைக் கைது செய்து என்கவுண்டர் செய்ததைத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...