சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு மரணமடைந்ததை கண்டித்து வரும் (05.07.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கழக பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




