தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களையும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தொழில் முனைவோர், உழைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறு, குறு தொழில்கள் வெற்றியடைந்தால் மட்டுமே நமது நாடு வளமான, செழிப்பான தமிழ்நாடாக உருவாகும். சிறு, குறு தொழில்கள் ஆணிவேராக உறுதியுடன் வளர வேண்டும். இந்தத் தொழில்களின் வளர்ச்சியும், தொழிலாளர்களின் முன்னேற்றமும் நமது தேசத்தின் வளத்திற்கு அடித்தளமாக அமையும். எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, அனைத்து சிறு, குறு தொழில் முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தொழில் செழித்து, தமிழ்நாடு வளம் பெற வாழ்த்துகிறேன்.


