Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை கோட்டைபாளையம் தனியார் காப்பகத்தில் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை  

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் “கிரேஸ் ஹேப்பி ஹோம் டிரஸ்ட்” என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர் பெல்ட் மற்றும் கம்பு கொண்டு கண்மூடித்தனமாக கொடூரமாக தாக்கிய சம்பவம் உலகையே ஆழ்ந்த அதிர்ச்சிக்கும், மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலான இந்த வீடியோவில், 10-12 வயது சிறுவர்கள் அழுது கதறியபடி தாக்கப்படுவது மனிதாபிமானமுள்ள எவரையும் கலங்க வைக்கும். குழந்தைகள் நம் நாட்டின் எதிர்காலம்; அவர்களை அன்போடு அரவணைத்து, பாதுகாப்பான சூழலில் வளர்க்க வேண்டிய காப்பகங்கள், இவ்வாறு கொடுமைகளின் கூடாரமாக மாறுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தக் காப்பகத்தில் 26 ஆதரவற்ற குழந்தைகள் தங்கி, அடிப்படை கல்வி மற்றும் பராமரிப்புக்காக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய வேண்டியவர்கள், அவர்களை மிருகத்தனமாகத் தாக்குவது ஏற்புடையதல்ல. குழந்தைகளைத் தாக்கிய ஊழியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும். இந்தக் காப்பகத்தின் உரிமத்தை   உடனடியாக ரத்து செய்து, அங்கு தங்கியிருக்கும் குழந்தைகளை அரசு காப்பகங்கள் அல்லது பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து தனியார் காப்பகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளின் நலன் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சமூக நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும். 2017-இல் 438 காப்பகங்கள் அனுமதியின்றி மூடியது, இதற்கு முன்னுதாரணமாக உள்ளது. இப்போது மீதமுள்ள 494 காப்பகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மறுவாழ்வு மற்றும் கொடுமையால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். விழிப்புணர்வு மற்றும் புகார் மையத்தின் மூலம்  காப்பகங்களில் நடைபெறும் தவறுகளைப் புகார் செய்ய பொதுமக்களுக்கு 24/7 இயங்கும் தொலைபேசி எண்களை அறிவிக்க வேண்டும். இந்நிகழ்வை பார்க்கும்போது ஆதரவற்ற குழந்தைகள், பெண் பிள்ளைகள், முதியவர்களின்  பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது வேதனை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, உரிய  நடவடிக்கைகளை எடுப்பதோடு கடுமையான தண்டனைகளையும் விதிக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

Releated Posts

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் – பத்திரிக்கை செய்தி – 24.08.2026

*தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன்* *கேப்டன் விஜயகாந்த்* அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை *”வறுமை ஒழிப்பு தினமாக”* தேமுதிக கடைப்பிடித்து…

ByBySenthil KumarAug 24, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...