கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி (வீல்சேர்) வழங்காமல் 3 மணி நேரம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கி பணம் கொடுத்தால்தான் சக்கர நாற்காலி கொடுக்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? அரசு மருத்துவமனை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதால் இதற்குத் தீர்வாகுமா? மனிதநேயத்தோடு செயல்படாத அந்த அரசு மருத்துவமனையின் ஊழியர்களுக்குக் கடும் கண்டனத்தைத் தேமுதிக சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
