Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கோயம்பேட்டில் இளம் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

கோயம்பேட்டில் இளம் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அறிக்கை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, 18 வயதுடைய இளம்பெண் யான்சி கார் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் எனக் கூறப்படும் யான்சி, தனது நண்பர்களுடன் பாருக்கு சென்றிருந்த நிலையில், அங்கு இருந்த மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் வன்முறையாக மாறி இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை செய்வது மனிதநேயமற்ற மற்றும் கடுமையாகக் கண்டிக்கத்தக்க குற்றச் செயலாகும். பெண்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகும் வகையில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. பெண்கள் மீதான வன்முறைகளையும், ஆணாதிக்க மனப்பான்மையையும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். “பெண்ணின் உயிர் மலிவல்ல; நீதியே பதிலாக வேண்டும்”. இளைஞர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சமூகமே தலைகுனியும் வகையிலான செயல்களில் ஈடுபடக் கூடாது. இனி இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க இளைஞர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவர்களை நல்வழிப்படுத்தும் பெற்றோர்களுக்கும், பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்க வேண்டிய அரசுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. அனைவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

Releated Posts

மனிதநேய அடிப்படையில் பிரபல திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான திரு.சத்தியேந்திரா இறுதி சடங்கிற்கு தேமுதிக உதவ தயார்

பிரபல திரைப்பட நடிகரும், சினிமா விமர்சகருமான திரு.சத்தியேந்திரா அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் தற்போது…

ByBySenthil KumarMay 29, 2026

(கேப்டன் ஆலயம்)தேமுதிக தலைமை கழகம் – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarMay 28, 2026

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...