இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற சொல்லுக்கு இலக்கணமாக நம்மிடமிருந்து மறைந்தாலும் தெய்வமாக நம் அனைவரையும் வழி நடத்திக் கொண்டிருக்கும் நமது அன்பு தலைவர் பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களது 73வது பிறந்தநாளில் (25.08.2025) தமிழகம் முழுவதும் “இயன்றதை செய்வோம் இல்லாதவற்கே” என்ற கொள்கைப்படி அன்னதானம் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் தந்து, கழக கொடியேற்றி, பேனர்கள் அமைத்து வறுமை ஒழிப்பு தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய அனைத்து மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கேப்டன் ஆலயத்தின் (தலைமை கழகம்) சார்பில் எங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
X தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், முன்னாள் அமைச்சர்கள் திரு.SP.வேலுமணி, திரு.Dr.C.விஜயபாஸ்கர், திண்டுக்கல் திரு.C.சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் திரு.நைனார் நாகேந்திரன், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் திரு.அண்ணாமலை, திருமதி.வானதி சீனிவாசன்,MLA., திரு.எச்.ராஜா, திரு.அஷ்வத்தாமன் அல்லிமுத்து, திரு.அமர் பிரசாத் ரெட்டி, திரு.R.சரத்குமார், அமமுக நிறுவனர் திரு.TTV.தினகரன், புதிய நீதி கட்சியின் நிறுவனர் திரு.ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன், மக்கள் நீதி மய்யம் நிறுவனர் திரு.கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான், த.வெ.க தலைவர் திரு.விஜய், திருமதி.சசிகலா அம்மையார், திரு.Dr.வேலமுர் கோவிந்தராஜன், திரு.ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், நடிகர்கள் திரு.தியாகு, திரு.தாடி பாலாஜி, திரு.கூல் சுரேஷ், திரைப்பட தயாரிப்பாளர் திரு.டி.சிவா, திரு.சௌந்தர்ராஜா, மற்றும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த திரைப்பட இயக்குனர் திரு.விக்ரமன், சின்னதிரை நடிகர், நடிகைகள் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.
