குழந்தைகள் நம்முடைய எதிர்காலம் மட்டுமல்ல; அவர்கள் நம் சமுதாயத்தின் உயிரும் ஒளியும். குழந்தைகளுக்கு எதிரான எந்தவிதமான பாலியல் வன்கொடுமையும் மனிதநேயத்துக்கே எதிரான கொடூர குற்றமாகும். இத்தகைய அநீதி எந்த வடிவிலும் நிகழக்கூடாது. இன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முக்கிய நாள். குடும்பம், பள்ளி, சமூகமெல்லாம் குழந்தைகளின் பாதுகாப்பில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் வலுப்படுத்தல், மற்றும் எச்சரிக்கை – கல்வி – பாதுகாப்பு ஆகிய மூன்றும் ஒன்றாக செயல்படும்போதே இத்தகைய குற்றங்களை முற்றிலும் ஒழிக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழும் ஒரு நாட்டை உருவாக்குவோம். அவர்களின் குரலாக இருப்போம். அவர்களின் பாதுகாப்பு நமது பொறுப்பு.




