கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியது கண்டனத்துக்குறியது. மேலும் மருத்துவரை தாக்கிய அந்த இளைஞருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உள்ளது. தமிழக அரசு உடனடியாக மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை தரவேண்டும். சட்டம், ஒழுங்கு இன்றைக்கு சீர்குலைந்து, கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு நடப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுக்கு அடுத்ததாக உயிரை காப்பாற்றும் பணியை செய்பவர்கள் தான் மருத்துவர்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு சிகிச்சை அளித்தும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத விரக்தியில் அந்த இளைஞன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. அதன் உண்மை நிலை அறிந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும். அதேபோல் மனநிலையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் எதற்காக கொடூர செயலில் கத்தியால் தாக்கினான் என்ற உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.