நமது தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் இந்த கழகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பித்தார். கேப்டன் அவர்கள் கட்சியை ஆரம்பித்தபோது, மதுரையில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 28 லட்சத்திற்கும் மேல் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களின் பேராதரவோடு மிகப் பிரமாண்ட வெற்றி மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்திருக்கிறோம்.
நம் தலைவர் இல்லாமல் நாம் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் மாநாடு இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. எனவே மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O மாநாட்டிற்கு என் உயிரினும் மேலான அன்பு கழக உடன் பிறப்புகளே நீங்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் தலைமையில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், தொண்டர் அணி சகோதரர்கள் மற்றும் தொண்டர்களும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு கிளைகளிலிருந்தும் பொதுமக்களையும் அழைத்து கொண்டு இந்த மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன்.
நமது நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொரு இல்லமாக நேரடியாக சென்று வெற்றிலை, பாக்கோடு மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O அழைப்பிதழ் கடிதத்தை கொடுத்து அனைவரையும் மாநாட்டிற்கு வரவேற்க வேண்டும்.
வரவிருக்கும் 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய இருப்பதோடு இந்த வெற்றி ஒவ்வொருவரின் வெற்றி என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.
நன்றி வணக்கம்
“நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்” “நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசு கொட்டும்”





