மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், தைரியமும் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளீர்கள். மேலும் பெண்கள் இதுபோன்று எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று, பெண்கள் தங்களுடைய திறமையையும், சாதனையும் நிலை நாட்ட வேண்டும். இந்த வெற்றி ஒட்டுமொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்.





