இந்தியாவின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சி அண்ணியார் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த் அவர்கள் இன்று (15.08.2025) நாமக்கல் மாவட்டத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விஜய சரவணன், தொழிற்சங்க பேரவை தலைவர் திரு.பொன் இளங்கோவன் அவர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் திரு.வி.பி.விஜய் பிரபாகர் அவர்கள் இன்று (15.08.2025) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் தேசிய கொடியேற்றிவைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.










