Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • விருதுநகர் பட்டாசு ஆலையின் வெடி விபத்து குறித்து அறிக்கை

விருதுநகர் பட்டாசு ஆலையின் வெடி விபத்து குறித்து அறிக்கை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும், ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, அனைத்து பட்டாசு ஆலைகளிலும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், இது தொடர்பாக, திமுக அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துகிறோம். அது மட்டுமில்லாமல் இந்தப் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறதே தவிர, நிரந்தர தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. வெறும் நிவாரண தொகை அளிப்பது மட்டும், இதுபோன்ற பிரச்சனைக்குத் தீர்வு கிடையாது. பட்டாசு ஆலைகளின் உண்மை நிலவரத்தைக் கண்டறிந்து, அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து, பட்டாசு ஆலைகளின் விபத்துகளை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழக அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...