Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், காவேரி நதியில் தண்ணீர் திறந்துவிடாததைக் கண்டித்தும், ஒகேனக்கலில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்தும், காவிரி நதியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாத கர்நாடக அரசுகளின் செயல்பாட்டை எதிர்த்தும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்றியமைக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழக அவைத்தலைவர் டாக்டர் திரு.V.இளங்கோவன், M.B.B.S. அவர்களுக்கும், தர்மபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.B.குமார் அவர்களுக்கும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.P.விஜயசங்கர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு.பழனியப்பன்அவர்களுக்கும், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவேரி திரு.தனபாலன் அவர்களுக்கும், தாராபுரம் திரு.காளிமுத்து அவர்களுக்கும் தேமுதிக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், கழக அணி நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கழகத் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உறுதுணையாக இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...