சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர். பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் நடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்? இந்த குற்றத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும் அந்த குடும்பத்தாருக்கும் நியாயத்தை இந்த அரசு வழங்க வேண்டும். விலங்குகளை விட மிகவும் கீழ்த்தரமாக மனித விலங்குகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த அந்த கயவர்களை இந்த நாடும் மன்னிக்காது தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள் எனவே இந்த ஆளும் திமுக அரசு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமே இது போன்ற நிகழ்வுகள் எங்கும் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை.
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களுக்கு கடுமையான போக்சோ தண்டனை வழங்கி இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…