Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே டாஸ்மாக் மது விற்பனையை நிறுத்தலாமே?. அதை விட்டுவிட்டு கண் துடைப்பு நாடகமாக விளம்பரத்தில் கண்ணீரை வடிப்பதும், மறுபுறம் பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து தமிழ்நாட்டைப் போதை நாடாக மாற்றியது ஒன்று தான் திமுகவின் சாதனை ஆகும். மது விற்பனை ஒன்று மட்டும் தான் சாதனையே தவிர, தமிழகத்தில் முன்னேற்றமும், பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை இந்த (மது விற்பனை) சாதனையை, வேதனையோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே தமிழக அரசு வீண் விளம்பரங்கள் மூலம் விளம்பரத்தைத் தேடாமல், ஒரே கையெழுத்து மூலம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினாலே, தமிழகத்தில் இங்கு யாரும் போதையின் பாதையில் போக மாட்டார்கள். அதேபோல திமுக அமைச்சர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டில் போதையை ஒழித்துவிடலாம். எனவே இதையெல்லாம் செய்யத் தவறிய தமிழக முதல்வர் அவர்கள் வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்பரத்தைத் தேடிக்கொள்கிறாரே தவிர, உண்மையில் மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இந்த அரசின் இரட்டை நிலைப்பாடு கண்டனத்துக்குறியது.

Releated Posts

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து அரசியல் தலையீடின்றி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரே காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நாளிதழில்…

ByBySenthil KumarNov 24, 2026

தவெக கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

தவெக கட்சியின் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.…

ByBySenthil KumarNov 19, 2026

நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி! அவர்களின் எதிர்காலமே நாட்டின் உண்மையான வளர்ச்சி!. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர்…

ByBySenthil KumarNov 14, 2026

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உயிரிழந்த குறித்து ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. வாழ்க்கையில் எண்ணற்ற கனவுகளுடன்…

ByBySenthil KumarNov 10, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...