மதுரை மாவட்டம், முல்லை நகர் பகுதியில் பல ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அப்பகுதியில் குடியிருப்புகளை அகற்றி கால்வாய் மற்றும் கண்மாயிகளை விரிவுபடுத்துவது முறையா?. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு பட்டா தரமறுப்பது எந்த விதத்தில் நியாயம்?. தேர்தல் வரும் காலங்களில் மட்டும் இந்த பிரச்சனையை ஒத்தி வைப்பதும், பிறகு மீண்டும் இவர்களை காலி செய்ய வழியுறுத்தும் நிலை தான் நிகழ்கிறது. அப்பகுதிகளை ஆக்கிரமித்து கால்வாய், கண்மாய்களை விரிவுபடுத்துவதை விட்டு விட்டு, மாற்றாக என்ன செய்யவேண்டும் என ஆராய்ந்து இந்த அரசு முடிவு எடுக்க வேண்டும். வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும் இந்த மக்களிடையே, மனிதாபிமானத்தோடு இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, உடனடியாக மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
