Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் பங்கை கேட்கும் முழு உரிமையும் தமிழகத்திற்கு உள்ளது. காவிரி நீர் பிரச்சனை ஏற்கனவே நீண்டகாலமாக தொடர்ந்து வரும் முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், மேகதாது அணை திட்டம் தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழக முதலமைச்சர் உடனடியாக கர்நாடக அரசுடனும், மத்திய அரசுடனும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டை வடிகாலாக பயன்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையேயான மிகப்பெரிய பிரச்சனையாக பூதாகரமாக வெடிக்கும் அபாயம் உருவாகும் நிலை உள்ளது. அந்த சூழ்நிலையை தவிர்க்க மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். “கொடுத்ததெல்லாம் கொடுத்தான்; யாருக்குக் கொடுத்தான்? ஒரு மாநிலத்திற்கா கொடுத்தான்? இல்லை, தமிழகத்திற்கும் கொடுத்தான். தண்ணீர் என்பது இயற்கை அது பொது சொத்து அனைவருக்கும் சமமானது. அந்தத் தண்ணீரைக் கேட்கவும் பயன்படுத்தவும் தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முழு உரிமை உள்ளது. எனவே, மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.”

Releated Posts

தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டி தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்,…

ByBySenthil KumarJul 18, 2026

ஊழல் மற்றும் கோயில் நில மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை தொடர வேண்டி அறிக்கை

சென்னை, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி மீது தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதை தேமுதிக வரவேற்கிறது.…

ByBySenthil KumarJul 16, 2026

லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்றதாகக் கூறி ஜூலை…

ByBySenthil KumarJul 15, 2026

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை  கண்டித்து அறிக்கை – தேதி: 01.07.2026

தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. தேசிய மருத்துவ ஆணையம்…

ByBySenthil KumarJul 15, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...