Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடரும் அவலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் பணியாற்றி வந்த 22 வயது பெண்ணை, அங்கு வேலை செய்து வந்த உணவக மாஸ்டர் மற்றும் மேலும் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கல்லூரி வளாகத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை ஏற்புடையதல்ல. இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள உணவக மாஸ்டர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும். அதேபோல், சென்னை தரமணியில் வேலை தேடி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த சோகமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கணவன், மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் வந்த கவுரவின் மனைவி, வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி காவலாளி உள்ளிட்ட 5 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் மனிதத்தன்மையற்ற ஒரு கொடூரச் செயலாகும். கணவன் மற்றும் குழந்தையின் உடல்கள் சட்டலமாக கிடைத்த நிலையில், மனைவியின் உடல் தேடப்பட்டு வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த அரக்கத்தனமான செயலை செய்த கயவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை காக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி அறிக்கை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகால…

ByBySenthil KumarSep 21, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...