தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தவெக தலைவர் திரு.விஜய், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு.சி.விஜயபஸ்கர், திரு.SP.வேலுமணி, திரு.செங்கோட்டையன் மற்றும் அதிமுக முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்பி யுமான திரு.சு.திருநாவுகரசர், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு.ஜான் பாண்டியன், SDPI கட்சி திரு.முகமது முபாரக், புதிய நீதி கட்சியின் தலைவர் திரு.ஏ.சி.சண்முகம், பஜாக மாநில செயலாளர் திரு.வினோஜ்P.செல்வம், திரு.SG.சூர்யா மற்றும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், சார்பு அணி நிர்வாகிகள் என்று தமிழகம் முழுவதும் வால்போஸ்டர் ஒட்டியும், பேனர்கள் வைத்தும், கொடி அமைத்தும், நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கி சிறப்புப் பூஜைகளும் செய்து தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி தண்ணீர்ப்பந்தல் திறந்தும் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டு இருக்கிறேன். மற்றும் நேரில் வந்தும் தொலைப்பேசியிலும், சமூகவலைத்தளத்திலும், பத்திரிக்கை விளம்பரம் செய்தும் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பொதுமக்களுக்கும் மற்றும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
