Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடி ஏற்றி நிர்வாகிகளுடன் மே தினத்தை கொண்டாடினார்கள். தொழிற்சங்கத்தின் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு ஆட்டோ தொழிலாளர்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கினார். மேலும் தொழிலாளர்களுக்கு உணவு அளித்து விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., கழக துணைச் செயலாளர்கள் திரு. எம்.ஆர்.பன்னீர்செல்வம், அவர்கள், திரு.SSS.U.சந்திரன் அவர்கள், கழக இளைஞர் அணி செயலாளர் திரு.வி.விஜயபிரபாகர் அவர்கள், தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.G.காளிராஜன், தொழிற்சங்க பேரவை தலைவர்கள் திரு.பொன்.இளங்கோவன், தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.P.வேணுராம், தொழிற்சங்க பேரவை துணைச் தலைவர்கள் திரு.K.V.பாலாஜி,B.Com., தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர்கள் திரு.S.முருகராஜ்,M.A.,B.L., திரு.ரா.ஜெயபால் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...