தேமுதிக கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று (02.10.2024) 155வது மகாத்மாகாந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






