Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com

தேமுதிக கட்சி 20 ஆம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம் செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) இன்று 14.09.2024 காலை 11 மணியளவில் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜய்காந்த் அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கேப்டன் ஆலயம் பெயர் பலகை திறப்பு விழா, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர் திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Releated Posts

தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி

தீமையை அழித்து, நன்மை வெல்லும் என்ற உயரிய தத்துவத்தையும், இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நம்பிக்கையையும் உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளே தீபாவளி. ஏழை,…

ByBySenthil KumarNov 7, 2026

தேமுதிக தமிழ்நாடு நாள் வாழ்த்துச் செய்தி

இன்று 01 நவம்பர் தமிழ்நாடு நாள் இந்த உலகின் மூத்த மொழி தமிழ் மொழி, நமது முன்னோர்களால் போற்றி காப்பாற்றப்பட்ட  நமது தமிழ் மொழியையும்,…

ByBySenthil KumarNov 1, 2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி விழா, 64வது குரு பூஜையை முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த்,MLA., அவர்கள் மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது…

ByBySenthil KumarOct 30, 2026

தேமுதிக பொருளாளர் திரு.எல்.கே.சுதீஷ் MP., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி – 29.10.2026

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை, இன்று (29.10.2026) தேமுதிக பொருளாளர், மாநிலங்களவை உறுப்பினர்…

ByBySenthil KumarOct 29, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...