தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள *கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்)* இன்று 14.09.2024 காலை 11 மணியளவில் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜய்காந்த் அவர்கள் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கேப்டன் ஆலயம் பெயர் பலகை திறப்பு விழா, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை* நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர் திரு. ப. பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள், கழக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






