“இஃதார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (22.03.2025) மாலை 6.00 மணியளவில், தேமுதிக கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு.ஷேக் தாவூத் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு.முனைவர் பாஷா அவர்கள், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் திரு.முகமது அதாவுல்லா அவர்கள், தேமுதிக கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்கள், கழக மீனவர் அணி துணைச் செயலாளர் திரு.கே.நிஜாமுதின் அவர்கள்,உயர்மட்ட குழு நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.




