மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அல்லது தங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய பயிர் இழப்பீடும், நிவாரணத்தையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட போக்குவரத்தைச் சரி செய்து, சாலை வசதியை மேம்படுத்தி, முக்கியமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடும், பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற கட்டண உயர்வுகளைக் கண்டித்தும், திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
