Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்

நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த புனித நாளை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மிலாடி நபி திருநாளாகக் கடைப்பிடிக்கின்றனர். “எல்லா மதமும் சம்மதம்” என்ற கொள்கையை வலியுறுத்திய தலைவர் கேப்டன் அவர்களின் வழியில், நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து, நபிகள் நாயகம் அவர்களின் நெறிகளைப் பின்பற்றி, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவோம். “இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கிறார்” என்றார் நபிகள் நாயகம். இந்த புனித நாளில் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தேமுதிக சார்பாக மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது ஓணம் பண்டிகை. இந்நாளில் ஒற்றுமையையும், செழிப்பையும், கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் அனைத்து கேரள மக்களுக்கும் தேமுதிக சார்பாக ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.  

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...