Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

தூய்மை பணியாளர்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை

தீவிரவாதிகளை கைது செய்வது போல நள்ளிரவில் தூய்மை பணியாளர்களைக் கைது செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? 12 நாட்களாகச் சம்பள உயர்வுக்காகவும்,  நிரந்தர பணி வழங்கிடவும் போராடிய தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்தது மிக மிக கண்டனத்திற்குரிய ஒரு விஷயம். உடனடியாக முதலமைச்சர் அவர்களும் துறை சார்ந்த அமைச்சர்களும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இன்றைக்கு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தங்கள் உரிமைக்காக போராடிய தூய்மை  பணியாளர்களுக்கு இந்த அரசு நிச்சயம் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். நள்ளிரவில் கைது செய்ததை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Releated Posts

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – தலைமை கழக அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தலைமையில் வரும்…

ByBySenthil KumarSep 9, 2026

உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டி அறிக்கை

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு பகுதியில் சுமார் ரூ.30,000 கோடி முதலீட்டில் சிப்காட் மூலம் பசுமைத்தள கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய, மாநில அரசுகள்…

ByBySenthil KumarSep 9, 2026

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் பாதுகாக்க, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல்…

ByBySenthil KumarSep 7, 2026

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்அவர்களின் 155வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றுவோம்

ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக அஞ்சாமல் போராடி, சுதேசி உணர்வை மக்களிடம் விதைத்த வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாள் இன்று (05.09.2026) மிக பெரிய செல்வந்தாராக பிறந்து…

ByBySenthil KumarSep 5, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...