துணை முதல்வர் திரு.உதயநிதி அவர்கள் தலைமையில் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை தவறாகப் பாடியுள்ளார்கள். அதனால் பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டெக்னிக்கல் பிரச்சனை (technical Problem) என உதயநிதி அவர்கள் கூறியுள்ளார். தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல்களை முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்துப் பாடவைக்க வேண்டும். பாடத் தெரியவில்லை என்றால் ரெக்கார்டு செய்த தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடவைக்க வேண்டும். அதை செய்யாமல் தவறாக பாடுவது, தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். டெக்னிக்கல் பிரச்சனை என்று சொல்வது, இவர்களுக்கு என்றால் ஒரு நியாயம், மற்றவர்களுக்கு என்றால் ஒரு நியாயமா என்ற கேள்வி எழுகிறது எனவே தவறு யார் செய்தாலும் தவறு, தவறு தான். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் அரசு கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசினுடைய கடமையாகும்.
