Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் திரு.பாக்யராஜ்  அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட இயக்குனர், நடிகர் திரு.பாக்யராஜ்  அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு.பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (27.06.2026) காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாகத் திகழ்ந்த திரு.பாக்யராஜ் அவர்கள், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர். அவர் இயக்கிய மற்றும் நடித்த தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, அந்த 7 நாட்கள் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, பல வெள்ளி விழா திரைப்படங்களாக அமைந்துள்ளன.திரு.பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் கேப்டன் அவர்கள் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. திரு.பாக்யராஜ் அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் நீண்டகாலமாக நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறோம். கேப்டன் அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் பாக்யராஜ் அவர்கள். அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகும் உயர்ந்த பண்பாளர்.அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரது மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும், அவரை இழந்து வாடும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Releated Posts

மேகதாது அணை விவகாரம், தமிழக அரசு டில்லி பிரதிநிதி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி அறிக்கை

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திரு.வெங்கடநாராயணா  அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்கனவே கர்நாடக மாநில முதலமைச்சர்…

ByBySenthil KumarJun 27, 2026

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டி அறிக்கை

மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவு, பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.…

ByBySenthil KumarJun 24, 2026

அமோனியா வாயு கசிவுவால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட…

ByBySenthil KumarJun 24, 2026

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணானதை கண்டித்து அறிக்கை

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மழை காலம் தொடங்கும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழையால்…

ByBySenthil KumarJun 24, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...