திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று (11.10.2024) இரவு ரயில் விபத்து ஏற்பட்டது துரதிஷ்டமானது. ரயில் விபத்துக்கான காரணம் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். மெயின் லையனில் செல்ல வேண்டிய பயணிகள் ரயில் லூப் லையனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியது மிகப் பெரிய அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இதற்குத் தொழில்நுட்ப பிரச்சனை காரணம் என்று சொல்கின்றனர். மக்கள் உயிரைத் துச்சமாக நினைத்து கவனக்குறைவாகச் செயல்படும் அரசுகள் உடனடியாக விபத்துக்கள் நடக்காத வண்ணம் கவனம் செலுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வண்ணம் கவனமாகச் செயல்பட வேண்டியது அரசுகளின் கடமை ஆகும். எனவே காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.
