ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டி அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…