திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு பகிலும் மாணவன் சக மாணவனுடன் பென்சில் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு அரிவாளால் வெட்டிய செய்தி அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று வாக்குவாதம் செய்து, தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குது. மேலும் திருநெல்வேலியில் அரிவாளால் வெட்டுவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் பள்ளியில் ஒழுக்கத்தையும், கல்வியையும் பயில வேண்டிய இடத்தில் அரிவாள் வெட்டு கலாச்சாரத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்க கூடியது. மேலும் உடனடியாக தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் அந்த மாணவனுக்கு உரிய தண்டனை கொடுத்து, இனி இதுபோன்று நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் “நல் ஒழுக்கம்” என்ற ஒரு பாடத்திட்டத்தை செயல்படுத்தி, எதிர்கால குழந்தைகளுடைய வாழ்க்கைக்கு அறிவுரை செய்து, இதுபோன்று அரிவாள் கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் தமிழக அரசு இணைந்து செயல்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிவு பாதையில் இருந்து காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
