பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி அவர்கள் கூறியது போல், “ஒரு பெண் இரவு நேரத்திலும் தனியாக, பயமின்றி செல்ல முடிந்தால், அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது” என்பதற்கிணங்க இன்றளவும் அந்த நிலை நம் தமிழ்நாட்டில் வந்திருக்கிறதா? திமுகக் கொடியைப் பொருத்திய காரில் இருந்த சிலர், குழந்தையுடன் பயணித்த பெண்களையும், குடும்பத்தினரையும் துரத்தியும், பயமுறுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் பெரிய அரசியல் பின்புலம் உடையவர்களாக இருந்தாலும், காவல்துறை உடனடியாக அவர்களை யார் என்று கண்டுபிடித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்தாலே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை” என்று அறிவித்திருக்கிறார். திமுகக் கொடியைப் பொருத்திய காரில் வந்த நபர்கள் அந்தக் குடும்பத்தினரை வீடு வரை துரத்தியும், பயமுறுத்தியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, முதல்வர் அவர்கள் சொன்ன 5 ஆண்டு கால தண்டனையை, முதல் வழக்காக இந்தக் நபர்களுக்கு வழங்க தமிழக முதல்வர் காவல் துறைக்கு ஆணையிடுவாரா?, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா?.
