தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு.தா.வெள்ளையன் (76) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வருத்தம் அடைந்தேன். கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர், வணிகர் சங்க மாநாடு நடைபெற்ற பொழுது அவர் அழைப்பை ஏற்று அந்த விழாவில் நான் பங்கேற்றதை நினைவு கூறுகிறேன். வணிகர் சங்கத்தில் வணிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். பல போராட்டங்களை நடத்தி வணிகர்களுக்கு துணையாக நின்றவர். உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாருக்கும், வணிகர் சங்கத்தை சேர்ந்த அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
