Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக 19.08.2024 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் எனவும், கேங்மேன் தொழிலாளர்கள் அவரவர்கள் ஊர்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போதைய தலைமை பொறியாளர் திரு.ராஜேஷ் லக்கானி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அடுத்த பேச்சு வார்த்தையின் போது தங்களையும் அழைக்கிறோம். அதில் உங்கள் குறைகளை சொல்லுங்கள் நிவர்த்தி செய்கிறோம் என வாய்மொழி உத்தரவு கொடுத்தார்கள். ஆனால் தற்போது 01.02.2025 ஆம் தேதி தொழிற்சங்கத்திற்கும், மின்வாரியத்திற்கும் நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தைக்கு, கேங்மேன் தொழிலாளர் சங்கத்தை அழைக்காதது ஏன்?. மின்வாரியத்தில் 35 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருந்தபோது, புதிய மின் பாதை அமைப்பதற்கும், போல் நடுவதற்கும் 9,613 கேங்மேன் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் அவர்களைக் கொண்டு மின்வாரியத்தில் உள்ள அனைத்து பணிகளையும் செய்யும்படி AE மற்றும் JE, போர் மேன், அதிகாரிகள் அனைத்து பணிகளுக்கும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாங்கள் (AE மற்றும் JE, போர் மேன்) சொல்லும் அனைத்து வேலைகளையும் நீங்கள் (கேங்மேன் தொழிலாளர்கள்) செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியதன் காரணமாக, 75 கேங்மேன் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம், ஆனால் பொதுமக்களுக்கு மின் சேவை செய்து இறந்த தொழிலாளிக்கு எந்த பலனும் கிடையாது. அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் அவர்களிடம் அந்த வேலையை சொல்லவே இல்லை, அவராகவே அந்த வேலையை எடுத்து செய்ததன் விளைவு, அவர் உயிர் இழந்துள்ளார் என்று கூறுகிறார்கள். அதனால் இழப்பீடு தர முடியாது என அலட்சியப் படுத்துகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?. அரசு மின்துறையில் ஒரு முறை தளர்வு என்ற அடிப்படையில் BP NO: 41,42,43,44,45 என்ற அடிப்படையில் மஸ்தூர் பணியாளர்களை கம்பியாளராக (Wireman) அறிவித்தது போல், கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Releated Posts

தேமுதிக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாள் செய்தி : 12.02.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (12.02.2025) தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) 25 ஆம் ஆண்டு வெள்ளி…

ByBySenthil KumarFeb 12, 2025

25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயிரிலும் மேலான என் அன்பு கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் முதற் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி…

ByBySenthil KumarFeb 11, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் (பிப்ரவரி -12) 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடியின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம் – 11.02.2025

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1நாமக்கல் மாநகர் நாமக்கல் வடக்கு நாமக்கல் தெற்குதிருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், கழக பொதுச் செயலாளர்2செங்கல்பட்டுதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S.,…

ByBySenthil KumarFeb 11, 2025

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும்…

ByBySenthil KumarFeb 7, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...