Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழக சட்டசபையில் இன்று (02.04.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழக சட்டசபையில் இன்று (02.04.2025) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும். அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும். பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும். மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Releated Posts

தேமுதிக கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி: – 07.05.2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் இன்று (07.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில்…

ByBySenthil KumarMay 7, 2025

தேமுதிக மே தின விழா பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (01.05.2025) காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் மே…

ByBySenthil KumarMay 1, 2025

தேமுதிக மே தின வாழ்த்து செய்தி

ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும். உலகெங்கிலும் உள்ள உழைக்கும்…

ByBySenthil KumarApr 30, 2025

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 வது தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்…

ByBySenthil KumarApr 30, 2025
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...