Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு, மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும் வீடுகள், வணிக நிறுவனங்கள், மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு, அந்த நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இனி மின்வெட்டு காரணமாக அவதிப்படாத வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22ஆம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கேப்டன் அவர்களின் கொள்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொள்பவர்கள் விபரம்

வ. எண்மாவட்டத்தின் பெயர்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் / பதவி1தருமபுரி கிழக்குதிரு.டாக்டர்.V.இளங்கோவன்,M.B.B.S., அவர்கள் கழக அவைத்தலைவர்2தென் சென்னை வடக்கு தென் சென்னை தெற்குதிரு.L.K.சுதீஷ்,B.A.,MP., அவர்கள்,…

ByBySenthil KumarSep 21, 2026

தேமுதிக – தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் – பத்திரிகை செய்தி – 17.09.2026

தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2026) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் திரு.ப.பார்த்தசாரதி,Ex:MLA., அவர்கள்…

ByBySenthil KumarSep 17, 2026

தேமுதிக – மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பத்திரிக்கை செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், புரட்சி அண்ணியார், கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்களின் தலைமையில் இன்று 16.09.2026 புதன் கிழமை காலை 10.30…

ByBySenthil KumarSep 16, 2026

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் – 1 தமிழக விவசாயிகளின் துயரத்தையும் கடன் சுமையையும் கருத்தில் கொண்டு, தகுதியான அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின்…

ByBySenthil KumarSep 16, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...