Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • டாஸ்மாக் கடைகளிலேயே பாக்கெட் கள்ளச்சாராயத்தை விற்கும் திமுக அரசை கண்டித்து அறிக்கை

டாஸ்மாக் கடைகளிலேயே பாக்கெட் கள்ளச்சாராயத்தை விற்கும் திமுக அரசை கண்டித்து அறிக்கை

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளமாதேவி பஞ்சாயத்தில்  டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் பார் ஒன்று அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த பாரில் பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கின்ற நிலையை கடுமையாக கண்டிக்கிறோம். கல்லா நத்தம் சாராய வியாபாரி ஜோதிவேல் மற்றும் அவரது நண்பர் ஆத்தூர் பாலு இருவரும் திமுக பிரமுகர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில் மற்றொரு கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறாமல் காவல்துறை தடுக்க வேண்டும். விளம்பர மாடல் ஆட்சியில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது. கள்ளச் சாராயம் விற்பனையை தடுப்பதை விட்டு கள்ளச் சாராயம் குடித்து இறந்த பின் நிதி வழங்குவது எந்த விதத்தில் நியாயம். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா கள்ளக்குறிச்சி சம்பவம் போல் மீண்டும் உயிர்ப் பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் கள்ளச்சாரயம் வியாபாரி ஜோதிவேல், பாலு இருவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும். சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மன்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையிலேயே பாக்கெட் கள்ளச்சாராயம் திமுகவினரால் விற்கப்படுவது வீடியோ ஆதாரத்தின் மூலம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளி வந்து தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும், கடும் கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் அவர்கள் தமிழக அரசின் விளம்பரத்தின் மூலம் “போதையின் பாதையில் செல்லாதீர்கள், அது உங்களை அழித்துவிடும்” என்று விளம்பர அரசியல் செய்து கொண்டு டாஸ்மாக் கடைகள் மூலமாகவே கள்ளச்சாராயத்தை விற்பது மிகவும் கண்டனத்திற்குறியது. டாஸ்மாக் விற்பனையை கண்காணிக்கவும் நேரத்திற்கு மீறி திறந்து வைக்கப்படும் கடைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிக்கவும், தனி பிரிவை உடனடியாக இந்த அரசு அமைத்து கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்ட வேண்டும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேமுதிக சார்பாக ஆத்தூரில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Releated Posts

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டி அறிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் திரு.டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டிற்கு உரிய…

ByBySenthil KumarMay 25, 2026

அரசு மருத்துவமனையில் தவறான மருத்துவ சிக்கிசையால் செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பை கண்டித்து அறிக்கை

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சீதாலட்சுமி…

ByBySenthil KumarMay 23, 2026

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை  கண்டித்து அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும்…

ByBySenthil KumarMay 23, 2026

கேப்டன் காட்டிய பாதையில் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்

அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரின் விருப்பப்படி மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட…

ByBySenthil KumarMay 23, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...