மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, அரிட்டாப்பட்டி, வெள்ளாளப்பட்டி உட்பட 48 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், போராட்ட களத்தில் உறுதியாக நின்ற மக்களுக்கும் கிடைத்த வெற்றி. மேலும் தமிழக சட்டசபையில் இந்த திட்டம் வராது என்று தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் எங்கும் வராது என்று அறிவித்த மத்திய அரசுக்கும் இந்த நேரத்தில் எனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து, இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக தேமுதிக சார்பாக வரவேற்கிறேன். தேமுதிக சார்பாக நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து, டங்ஸ்டன் திட்டம் நிச்சயமாக வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்ததை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த மக்களின் உண்மையான போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.
