வேளச்சேரி ஏரியினை மீட்பதாகக் கூறி சென்னை வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள 850 வீடுகளை இடித்து, அங்கு வசிக்கும் 5000க்கும் மேற்பட்ட மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. குடியிருப்புகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிப் போராடிய பூர்வ குடி மக்களின் மீது காவல்துறை மூலம் திமுக அரசு அடக்கு முறைகளை ஏவுவது சிறிதும் மனிதநேயமற்ற கொடுஞ் செயலாகும். மேலும் தேர்தல் வாக்குறுதியில் திமுக பட்டா வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தது, ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அவர்கள் குடியிருப்பு இடத்தை காலி செய்ய சொல்லி, அகற்றுவது எந்த வகையில் நியாயம். எனவே பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
