Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை கழக அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி படுகொலை செய்ததை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை, திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் வரும் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் கனிம வளத்தை பாதுகாக்க போராடி வந்த சமூக ஆர்வலரை படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், பெண்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும்.

Releated Posts

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி

இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு.தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.…

ByBySenthil KumarOct 17, 2026

தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டி அறிக்கை

கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.13-க்கு கொள்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம்…

ByBySenthil KumarOct 13, 2026

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டி அறிக்கை

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணி…

ByBySenthil KumarOct 12, 2026

சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் செய்தி

பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள்! பெண் குழந்தைகளைப் போற்றுவோம்! பெண்ணுரிமையைக் காப்போம்! பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிர்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும்…

ByBySenthil KumarOct 11, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...