Desiya Murpokku Dravida Kazhagam

Email Us: contact@dmdkparty.com
  • Home
  • News
  • சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அறிக்கை

சபரிமலைக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்லும் பக்தர்களுக்கு கனிம வள லாரிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கி இரண்டு, மூன்று நாட்களில் வாகன விபத்துகள் அதிக இடத்தில் நடந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு கனிம வள லாரிகள் செல்வதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும். சபரிமலையில் கூட்ட நெரிசலில் இன்றைக்கு ஒரு பெண் பலியாகியுள்ளார். குழந்தைகளும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறார்கள். இதையெல்லாம் தேவஸ்தானம் முறைப்படுத்தி பக்தர்கள் வந்து செல்ல பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  சபரிமலைக்கு சென்று வருபவர்களுக்கு போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமலும், விபத்துகள் ஏற்படாமலும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.   

Releated Posts

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இந்தியாவின் 80-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நன்னாளிலே, நம் தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த…

ByBySenthil KumarAug 14, 2026

கரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியை தடுத்து நிறுத்திய பாட்டிக்கு பாராட்டு

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நான்கு வயது, 9 வயது, சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்ச்சி செய்த அந்த…

ByBySenthil KumarAug 14, 2026

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.…

ByBySenthil KumarAug 14, 2026

தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். புரட்சிக் கலைஞர்…

ByBySenthil KumarAug 7, 2026
Scroll to Top
× வணக்கம், தேமுதிக...