நெல்லையில் நீதிமன்ற வாசலிலேயே இளைஞர் படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தையே இன்றைக்கு உலுக்கி இருக்கிறது. முன் விரோதம் காரணமாக இந்த படுகொலை செய்யப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பதை உடனடியாக காவல்துறை கண்டறிய வேண்டும். நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுபோன்ற தொடர் படுகொலைகள் தமிழகத்தில் நடப்பது மக்கள் இடையே மிகப் பெரிய ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழ்நாடா?, இல்லை, கொலை நாடா” என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. “கொலை, கொலையா, தமிழகத்தில் படுகொலைகள்” அரங்கேறும் மாநிலமாகத் தமிழகம் மாறி இருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக முதல்வர் அவர்கள், இந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார், இதுபோன்ற படுகொலைகளை எப்படித் தடுக்கப் போகிறார் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து படுகொலைகள் நடப்பதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இனிமேலும் இதுபோன்ற படுகொலைகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கொலை, கொலையா தமிழகத்தில் படுகொலைகள் நடப்பதைக் கண்டித்து அறிக்கை
Releated Posts
மதுவை ஒழிப்போம் என்ற விளம்பரம் ஒருபுறம், பொங்கல் நாட்களில் 725 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் ஒருபுறம் இந்த முரண்பாட்டைக் கண்டித்து அறிக்கை
தமிழகத்தில் போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று தமிழக அரசின் மூலம் விளம்பரம் செய்யும் தமிழக முதல்வர், தன்னுடைய அதிகாரத்தில் ஒரு கையெழுத்திலேயே…
பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக மக்கள் புறக்கணித்து, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறித்து அறிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த 2020ல் ஆயிரம் ரூபாய்,…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து அறிவிப்பு
இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக…
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநரை சந்தித்தது குறித்து
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று (10.01.2025) தமிழக ஆளுநர் அவர்களை மாலை 4 மணிக்கு, தலைமை…